From Madurai to Mattakalappu to Mississauga
"Since 2009, it can be said that a new period in the Tamil poetic tradition has begun, namely the Trans/national Period. This period has seen the Tamil poetic traditions of the Sangam era contemporized by 1.5- and second-generation Tamils and articulated in English and other dominant languages of the countries they consider home. These transnational millennial poets, both men and women, draw on their Tamil culture as much as they do on the environments they were raised in by their diaspora parents. These are poets who navigate and negotiate between these new Akam-s and puṟam-s."
Post image

 

 
TamilChangemakers by TamilCulture.com, celebrates the convergence of business, the arts, tech, non-profit and more by bringing together members from around the world. By joining, you'll be helping us build a globally connected Tamil community where diversity in thought and experiences create unique opportunities and knowledge sharing.
____

In January 2001, an important anthology of translated Tamil literature was published in Canada by the late Chelva Kanaganayakam, a widely respected South Asian postcolonial literary theorist and former Professor of English at the University of Toronto.

Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka brought together for the first time, a comprehensive selection of modern, post-independent Tamil creative writing of more than 30 poets and authors from Sri Lanka and in various diasporas around the world.  This was significant not only because the anthology made this particular genre of world literature accessible to a new community of English-speaking readers for the first time but also planted the seeds for the next generation of Tamil poets in Canada who have now begun to draw on this tradition even as they seek to shape a new transnational consciousness.

Tamil, the language of this poetic tradition, is one of the oldest surviving classical languages in the world. Researchers have found Tamil inscriptions dating back to at least the 3rd century B.C.E, and it has been in continuous use ever since.  One of the ways in which the historicity of Tamil can be better understood perhaps is by comparing it to another classical language such as Hebrew, which fell out of common usage around 400 C.E. and preserved mostly as a liturgical language of the Jewish diaspora until the eventual creation of the State of Israel in the 20th century which revived its common usage albeit primarily in that country only.

Today, more than 75 million people speak Tamil.  It is a designated Official Language in Sri Lanka, Singapore, and the states and territories of Tamil Nadu, Puducherry, and the Andaman and Nicobar Islands in India.  In countries such as Malaysia, Mauritius, Seychelles, South Africa, and Réunion, Tamil has a significant cultural impact.  Tamil is on the rise in Canada as well. According to the 2011 Census, there are more than 140,000 Tamil language speakers in Canada though community estimates are higher. There are post-secondary Tamil Studies courses available in Canada, and Canadian Tamils are playing a key role in a new campaign currently underway to establish an endowed Tamil Chair at Harvard University in the United States.

This unparalleled continuity and reach of the Tamil language can be traced back to several thousands of years ago to the Sangam literary tradition that flourished in the present day state of Tamil Nadu in Southern India.

Sangam literature, dating back to at least the 3rd century B.C.E, is a collection of 2,381 poems composed by 473 poets (mostly men) located in and around the historic city of Madurai in Tamil Nadu.  This period is often referred to as the kaṭaicaṅkam or Third Sangam and is said to have lasted over 1,800 years.  It is believed that there were two other important literary periods that preceded this, namely the First (mutaṟcaṅkam) and Second Sangams (iṭaicaṅkam) that date back to as early as 9600 B.C.E to 5200 B.C.E. according to Tamil lore though no records from this time have yet been found.

The poems of the Third Sangam broadly deal with themes that can be categorized as either Akam (inner field) or puṟam (outer field).  The “inner field” topics deal with personal aspects of human life such as love and sexuality while the “outer field” deals with aspects of public life such as valour, ethics, governance, benevolence, philanthropy, and social customs.  Some poems that combine both aspects are referred to as Akappuṟam poems.  The works of Sangam literature were lost for several centuries before they were re-discovered and published in the 19th century by a number of Tamil scholars, particularly scholars from Jaffna, Sri Lanka (then Ceylon) such as Arumuga Navalar, C.W. Thamotheram Pillai, and J.V. Chelliah.

While these poems and foundational grammatical works such as the Tolkāppiyam formed the cornerstone of Sangam literature, this was only the first of many waves of Tamil poetry through the centuries.  The Sangam Period was successively followed by the Didactic Period (e.g. Tirukkuṛaḷ), Epic Period (e.g. Cilappatikāram), Devotional Period (e.g. tirumuRai), Chola Period (e.g. kamparaamaayaNam), Philosophical Period (e.g. Thiruppugazh), Tamil Puranangal in Saivism, Islamic, and Christian religious traditions (e.g. periya purANam, seera purANam, and Tēmpāvaṇi respectively), Tamil Renaissance Period (e.g. Bharathiyar kavithaikal), and the Contemporary Period (e.g. maranthul vAzhvom).

The Contemporary Period can be demarcated as having begun in the 1980s with the ethnic conflict in Sri Lanka.  The resulting 30 years of war saw different expressions of Tamil poetry formulated in many parts of the North, East and Central Sri Lanka that dealt with a number of socio-political issues within and outside of Tamil-speaking communities.  The resulting exodus of Tamil refugees and asylum seekers to India, Europe and North America also saw new poets emerge to take up the mantle, most notably Kasi Anandan (India), R. Cheran, Avvai Vickneasweran, and Zulfika Ismail (Canada), V.I.S. Jayapalan (Norway), and Ki Pi Aravindan (France) to name a few. Indeed, as the influential Tamil scholar K. Sivathamby succinctly noted, “Pine trees and snowfalls are no more alien to the Tamil poetic landscape.”

Since 2009, it can be said that a new period in the Tamil poetic tradition has begun, namely the Trans/national Period.  This period has seen the Tamil poetic traditions of the Sangam era contemporized by 1.5- and second-generation Tamils and articulated in English and other dominant languages of the countries they consider home.  These transnational millennial poets, both men and women, draw on their Tamil culture as much as they do on the environments they were raised in by their diaspora parents.  These are poets who navigate and negotiate between these new Akam-s and puṟam-s.

The below sampling of poems by emerging Canadian Tamil poets represent an exciting body of work that is diverse, inclusive, and broad in scope.  It is at once local and global. These poets are naturalized Canadians and citizens who have outlived their diaspora origins of refugeehood and immigration.  They live and write in urban cores and in various suburbs. They are students and professionals – artists and social workers. They travel within Canada – work abroad – and visit Sri Lanka on occasion.  Instagram and Tumblr have replaced alternative journals and newspapers as their mediums of expression.  They are within and outside of the Tamil community.  For them, their Tamil heritage is deeply meaningful but, as people of colour, recognize the importance of why #BlackLivesMatter more and acknowledge that we too are settlers of traditional Aboriginal lands in kanata. And they write of being and understanding Tamil in English, full of curiosity and almost never with irony. 

Perhaps most importantly, these poets constantly seek to explore, understand, and articulate the many ways of being Tamil.  In doing so, they have begun to shape a dynamic new Tamil consciousness in Canada.  For this, we owe them both our gratitude and support.

Anatomy – Yasietha Krishnakulasingam

We spoke of writing Tamil,
Without writing in Tamil
Memories filtered through a language
that places a stranglehold on our tongues
Words we break apart with our teeth
Fragmented

How many sounds have I swallowed?
A diet of unspoken words has nourished me

She wrote of a sun so loving
I thought of amma
Waiting on the beach
With our towels placed in the sun
The moment we ran to her
She eclipsed us in its warmth
We have come to learn
God lit the stars
with the light from our mother’s eyes

We spoke of pain
The way it twists us into these peculiar forms
And like a child seeking out a friend in the clouds
I see the letters of our childhood in her twisted heart
I see the இ that softens our la’s and ra’s
That guards இலங்கை 

We spoke of Tamil
Not in Tamil
But made of Tamil

We seek to learn its anatomy
By studying our stones

hurt – kayal vizhi

your father’s anger is not your home
even when it smells like warm milk and saffron
even when the windows are pregnant with loss
even when his sorrow is a messenger

you have his mouth,
it is a miscarriage of stories,
but remember your mothertongue,
it only speaks survival

repeat after me
my father’s anger is not my home


Perfect – Manivillie Kanagasabapathy

Brown eyes capture my gaze,
And I lean in slightly,
Drawn to the face that house these bottomless orbs.

A small, wide nose flares in exertion,
While full lips gasp for air,
I pull you closer,
Watching the moments pass through these eyes.

Your mother’s care, your father’s worry,
A lover’s gaze, fleeting touches, memories
It is there,
It is written.

Your body poised, for eternity, it seems,
Every muscle, every tendon straining,
Your sleek form coiled,
Ready, waiting, mine!

I shudder and thrust deep,
Watching the blood flow free
Losing myself in the moment,
I move fast and slash up.

A perfect kill, a perfect killer.

Your body twitches in its final moments,
As I watch you at my feet,
Blood flowing freely between us now,
The cuts at my side gaping with each breath.

My dispassionate gaze watches as they continue to fight,
Pushing back lines, giving no quarter.
Knees buckling, I fall in agony.

Distorted voices cry in triumph,
The sounds of victory dim,
As victor and victim become intertwined
And in the field lie the bodies,
Without name, without nation,
Destinies entangled,
Hands outstretched,
Waiting for a peace never known.


Untitled – Kuru Selvarajah

Ginger crumbs in my tea
This home smells like
Heavy healing,
Unlike defeat.
It’s been a while
since I stepped
Foot on the land
that heard my first cry.
At nights,
I can feel the shadow
of the same sun
That gave me my skin.
There were
Times when I wished
It didn’t burn
Me like this – yet
between two languages and 
One tongue –
two voices and 
one heart
This skin is my only truth – 
My only truth.
I’ll hold onto it,
Like it holds onto me.

 

---

மதுரையிலிருந்து மட்டக்களப்பு வரையும், மட்டக்களப்பிலிருந்து மிசிசாகா வரையும்:  புலம்பெயர் தமிழர்களின் துயரங்களின் வெளிப்பாடுகள்
மொழிபெயர்ப்பு: அரசி விக்னேஸ்வரன்

பரவலாக மதிக்கப்பட்ட தெற்காசியப் பின் காலனித்துவ இலக்கியக் கோட்பாட்டாளரும், ரொரொன்ரோப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆங்கில விரிவுரையாளருமான மறைந்த செல்வா கனகநாயகம் அவர்களால் 2001 இல் ஒரு முக்கியமான மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் இலக்கியத் தொகுப்பொன்று வெளியிடப்பட்டது.  

“Lutesong and Lament: Tamil Writings from Sri Lanka” என்ற இந்தத் தொகுப்பு இலங்கையிலும்  வேறுபல புலம்பெயர் தேசங்களிலும் உள்ள 30க்கும் மேற்பட்ட கவிஞர்கள், எழுத்தாளர்களின் சுதந்திரத்துக்குப் பின்னதான தமிழ் புனைவு இலக்கியத்தின் முதலாவது விரிவான தொகுப்பாக அமைந்தது. இந்தத் தொகுப்பு முக்கியத்துத்துவத்துவம் பெறுவதற்கு அது முதன் முதலாக உலக இலக்கியத்தின் இப்பகுதியை ஆங்கில மொழி வாசகர்களுக்கு கிடைக்கும்படி செய்தது மட்டுமன்றி தேசம் கடந்த உணர்வு நிலையைக் கட்டமைக்கும் அதேவேளை இக்கவிதை மரபைத் தொடர எத்தனிக்கும் அடுத்த தலைமுறை கனேடியத்  தமிழ்க் கவிஞர்களிடையே ஒரு விதையாகவும் அது அமைந்ததே காரணமாகிறது. 

இந்தக் கவிதை மரபின் மொழியான தமிழ் இன்று உலகில் உயிர்வாழும் மிகப்பழமையான செம்மொழிகளுள் ஒன்று. கிறிஸ்துவுக்கு முன் 3ம் நூற்றாண்டு வரை பழமையான தமிழ்க் கல்வெட்டுக்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் தொடர்ச்சியான பாவனையில் இருந்து வருகிறது. ஹீப்ரூ போன்ற ஒரு செம்மொழியுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் தமிழின் வரலாற்று முக்கியத்துவத்தை சிறப்பாக விளங்கிக் கொள்ள முடியும். ஹீப்ரூ கி.பி. 400 களில் பாவனையிலிருந்து அழிந்து, பின்னர் யூத புலம்பெயர் மக்களின் மத வழிபாட்டுக்குரிய மொழியாகவே பேணப்பட்டு வந்தது. 20ம் நூற்றாண்டில் இஸ்ரேலின் உருவாக்கத்துடன் அந்த நாட்டில் மட்டும் பொதுப்பாவனையில் பயன்படுத்தப்படும் மொழியாக மறுமலர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. 

இன்று 75மில்லியனுக்கும் அதிகமானோர் தமிழைப் பேசுகின்றனர். இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இந்தியாவின் மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி என்பவற்றிலும் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் தமிழ்  உத்தியோகபூர்வ மொழியாக இருக்கின்றது. மலேசியா, மொரிசியஸ், சீசெல்ஸ், தென்னாப்பிரிக்கா, ரீயூனியன் ஆகிய நாடுகள்/பிரதேசங்களில் தமிழ் குறிப்பிடத்தக்க கலாசாரத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலும் தமிழ் வளர்ச்சியடைந்து வருகிறது. 2011ம் ஆண்டு குடித்தொகை மதிப்பீட்டின் படி, கனடாவில் 140,000 தமிழ் மொழி பேசும் மக்கள் இருக்கின்றனர் எனக் குறிப்படப்பட்டாலும் சமூகக் குழுக்களின் மதிப்பீடு இன்னும் அதிகமாக இருக்கிறது. கனடாவில் தமிழியல் கல்வியில் உயர்கல்விப் பாடங்கள் இருப்பதுடன் அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் ஒரு தமிழ்ப் பீடத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் கனடியத் தமிழர் முக்கிய பங்காற்றி வருகின்றனர். 

தமிழின் தொடர்ச்சியையும் இணையற்ற விரிவுவையும் தென்னிந்தியாவின் தற்போதைய தமிழ்நாடு என்கிற மாநிலத்தில் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் செழித்திருந்த சங்க இலக்கிய தமிழ் மரபிலிருந்து தொடங்கி  நோக்கலாம். 

தமிழ் நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மதுரை நகரிலும் அதனை அண்டியும் வாழ்ந்த 473 கவிஞர்களினால் (பெரும்பாலும் ஆண்கள்) எழுதப்பட்ட, குறைந்தது கி.மு 3ம் நூற்றாண்டுக்கும் பழமையான   2,381 கவிதைக்ளின் தொகுப்பே சங்க இலக்கியம் எனப்படுகிறது. 1800 வருடங்கள் நிலைத்ததாகக் கூறப்படும் இந்தக் காலப்பகுதி கடைச்சங்கம் அல்லது மூன்றாம் சங்கம் எனப்படுகிறது. இதற்கு முன்னர் கி. மு 9600 முதல் கி.மு 5200 வரை பழைமை வாய்ந்த முதற்சங்கம் மற்றும் இடைச் சங்கம் என்னும் குறைந்தது இரண்டு முக்கிய இலக்கியக் காலப்பகுதிகள் இருந்ததாக தமிழ் மரபில் நம்பப்பட்டாலும் இக்காலப்பகுதிகளில் இருந்து எந்த ஆதாரங்களும் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

கடைச் சங்கக் கவிதைகள் மேலோட்டமாக “அகம்” அல்லது “புறம்” என்று வகைப்படுத்தப்படக்கூடிய கருப்பொருட்களில் அமைந்திருக்கின்றன. அகம் என்பது காதல், காமம் போன்ற மனித வாழ்வின் தனிப்பட்ட அம்சங்களையும், புறம் என்பது பொது வாழ்வு தொடர்பான வீரம், நீதி, ஆட்சி, கருணை, கொடை  மற்றும் சமூக நெறிகள் போன்ற அம்சங்களையும் உள்ளடக்கி அமைகின்றன. இவ்விரண்டு கருப்பொருட்களையும் ஒருங்கே பாடும் கவிகள் அகப்புறக் கவிகள் எனப்படுகின்றன. சங்கக் கவிதைகள் பல நூற்றாண்டுக்ளாகத் தொலைந்திருந்து 19ம் நூற்றாண்டில் பல தமிழ் அறிஞர்களால் மீளக் கண்டுபிடிக்கப்பட்டு பதிப்பித்து வெளியிடப்பட்டன. இவர்களுள் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர்களான ஆறூமுக நாவலர், சி,வி தாமோதரம் பிள்ளை, ஜே வி செல்லையா போன்றோர் முக்கியமானவர்கள். 

இந்தக்கவிதைகளும் அதற்க்கு ஆதாரமாக அமைந்த தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களும் சங்கத் தமிழ் இலக்கியத்தின் ஆதாரமாக அமைந்த போதும் நூற்றாண்டுகளாக வீசிவரும் தமிழ் இலக்கிய அலைகளில் இது முதலாவது மட்டுமே. சங்ககாலத்தின் பின் தொடர்ந்து நீதி இலக்கிய காலம் (உ.ம். திருக்குறள்) , காவியக் காலம் (உ.ம். சிலப்பதிகாரம்), பக்திக் காலம் (உ.ம். திருமுறைகள்), சோழர் காலம் (உ.ம். கம்பராமாயணம் ), தத்துவக் காலம் (உ.ம். திருப்புகழ்), சைவம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமய மரபுகளில் தமிழ்ப் புராணங்களின் காலம் (உ.ம். வரிசைப்படி: பெரிய புராணம், சீறாப்புராணம், தேம்பாவணி), தமிழ் மறுமலர்ச்சிக்காலம் (உ.ம். பாரதியார் கவிதைகள்) மற்றும் சமகாலம் (உ. ம். மரணத்துள் வாழ்வோம்) என்று பல்வேறு காலங்களை நோக்காலாம். 

இதில் சமகாலம் என்பதை இலங்கையின் இனப்பிரச்சனையுடன் 1980 களில் ஆரம்பமான காலமாக வரையறுக்க முடியும். இதன் விளைவான 30 வருட யுத்தத்தின் போது வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய இலங்கையின் பல பகுதிகளில் இருந்து தமிழ் பேசும் சமூகங்களிடையேயும் அதற்கு வெளியேயுமான  சமூக- அரசியல் பிரச்சனைகள் தொடர்பான பல வகையான கவிதை வெளிப்படுகள் உருவாக்கம் பெற்றன. யுத்தத்தின் விளைவாக அகதிகளாகவும் புகலிடம் கோரியும் இந்தியா, ஐரோப்ப மற்றும் வட அமெரிக்காவுக்கு வெளியேறிய  மக்களிடையேயிருந்தும் புதிய கவிஞர்கள் வெளிவந்து முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டனர். இவர்களுள் காசி ஆனந்தன் (இந்தியா),  சேரன், ஔவை விக்னேஸ்வரன் மற்றும் சுல்பிகா இஸ்மைல் (கனடா), வ.ஐ.ச. ஜெயபாலன் (நோர்வே), கி.பி அரவிந்தன் (பிரான்ஸ்) ஆகியோரும் உள்ளடங்குவர். முக்கியமான தமிழ் அறிஞரான சிவத்தம்பி அவர்கள் சுருக்கமாகச் சொன்னது போல “தமிழ்க் கவிதைப் பரப்புக்கு பைன் மரங்களும் பனியும் இனிமேல் அந்நியமல்ல”

2009 இன் பிறகு, தமிழ்க் கவிதை மரபில் தேசம் கடந்த கவிதைக் காலகட்டம் ஒன்று தொடங்கியிருக்கிறது என்று சொல்லலாம். இந்தக்காலத்தில் சங்ககாலத்தின் தமிழ்க் கவிதை மரபு இரண்டாம் தலைமுறைத் தமிழர்களார் நவீனப்படுத்தப்பட்டு ஆங்கிலம் உட்பட்ட அவர்கள் சொந்த நாடு எனக்கருதும் நாடுகளின் மொழிகளில்  வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.இந்த நாடுகடந்த, ஆண்களும் பெண்களுமான புத்தாயிரமாண்டுக் கவிஞர்கள் அவர்களின் புலம்பெயர்ந்த பெற்றோரால் தாம் வளர்க்கப்பட்ட புதிய நிலத்திலிருந்து மட்டுமன்றி, தமது தமிழ்க் கலாசாரத்திலிருந்தும் கவிதைகளை உருவாக்குகின்றனர். இந்தக் கவிஞர்கள் புதிய அகங்களுக்கும் புறங்களுக்கும் இடையே நடக்கின்றனர். 

கீழுள்ள தெரிவு செய்யப்பட்ட சில கவிதைகள் வளர்ந்து வரும் கனடியத் தமிழ்க் கவிஞர்களினுடையவை. அவை பல்வகைமையுடைய, அனைத்தையும் உள்வாங்கும் தன்மை கொண்ட, பரந்த ஒரு இலக்கியத்தின் மாதிரிகளாக அமைகின்றன. உள்ளூர்த் தன்மையையும் உலகளாவிய தன்மையையும் ஒருங்கே கொண்டிருக்கின்றன. இந்தக் கவிஞர்கள் கனேடியர்கள்; குடியுரிமை பெற்றவர்கள்; தமது புலம்பெயர் வேர்களைத் தாண்டி வளர்ந்து விட்டவர்கள்; முக்கிய நகர்களையும் அவற்றை அண்டியும் வாழ்ந்துகொண்டு எழுதுபவர்கள். இவர்கள் மாணவர்கள், தொழில் முறைக் கலைஞர்கள், மற்றும் சமூக சேவையளர்கள். இவர்கள் கனடாவுக்குள் பிரயாணிப்பவர்கள்; வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள்; இலங்கைக்கு அவ்வப்போது சென்று வருபவர்கள். இவர்களது வெளிப்பாட்டு ஊடகங்களாக மாற்றுப் பத்திரிகைகள் மற்றும் இதழ்களின் இடத்தை Instagram மற்றும் Tumblr என்பன எடுத்துக்கொண்டுவிட்டன. அவர்கள் தமிழ்ச் சமூகத்துக்கு உள்ளும் புறமுமாக இருக்கின்றனர். அவர்களது தமிழ் மரபு அவர்களுக்கு ஆழமான அர்த்தமுடையது. ஆனால் நிறமுடையவர்கள் என்கிறவகையில் கறுப்பினத்தவ்ரகளுக்கான உரிமைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்கிறார்கள், கனடா என்கிற ஆதிக்குடிகளின் நாடுகளில் தாமும் ஒரு குடியேறிகள் தான் என்பதையும் புரிந்து கொள்கிறார்கள். தமிழராக இருப்பதையும் தமிழைப் புரிந்து கொள்வதையும் பற்றி ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். எப்போதும் ஆர்வத்துடனும், பெரும்பாலும் முரண்நகை இன்றியும் அவர்கள் எழுதுகிறார்கள். 

தமிழராக இருப்பதற்கான பல்வேறு விதமான வழிகளைத் தொடர்ந்து ஆரய்வதும், புரிந்து கொள்வதும், வெளிப்படுத்துவதும் இந்தக்கவிஞர்களுக்கு எல்லவற்றையும் விட முக்கியமாக இருக்கக்கூடும். இதை அவர்கள் செய்வதன் மூலம் ஒரு மாறிவரும் புதிய தமிழ் உணர்விற்கு கனடாவில் உருவம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கான எங்கள் நன்றியும் ஒத்துழைப்பும் அவர்களுக்கு உரித்தாகவேண்டியவை. 

 

உடற்கூறியல் - யசீதா கிருஷ்ணகுலசிங்கம்

தமிழை எழுதாமல்
தமிழை எழுதுவதைப் பற்றி நாம் பேசினோம். 
எமது நாக்குகளை நெரிக்கும் ஒரு மொழியினூடாக 
வடிகட்டப்பட்ட நினைவுகள்
நாங்கள் பற்களால் கடித்து உடைக்கும் சொற்கள்
சிதறல்கள். 

எத்தனை ஒலிகளை நான் விழுங்கியிருக்கிறேன்?
பேசாச்சொற்கள் உணவாகி எனக்கு ஊட்டமளித்திருக்கின்றன.

அவள் எழுதினாள்
மிக அன்பான ஒரு சூரியனைப் பற்றி
நான் 
கடற்கரையில் காத்துக்கொண்டிருக்கும்
அம்மாவை நினைத்துக்கொண்டேன்
எங்கள் துவாய்களை வெய்யிலில் வைத்துக்கொண்டிருப்பாள்
நாங்கள் அவளிடம் ஓடிய அந்த நொடியில்
அதன் கதகதப்பில் எம்மை ஒளிப்பாள்
புரிந்து கொண்டோம் 
கடவுள் நட்சத்திரங்களைப் மிளிர வைத்தது
தாயின் கண்களின் ஒளியை எடுத்துத்தான் என்று

நாங்கள் வலியைப் பற்றியும்
அது இவ்விசித்திரமான வடிவங்களாய் எம்மைத் திரித்து விடுவதைப் பற்றியும் பேசினோம்
ஒரு குழந்தை முகில்களுக்குள் தனது நண்பர்களைத் தேடுவது போல 
அவளது திரிந்த இதயத்துள் எனது சிறுபராய எழுத்துக்களை நான் காண்கிறேன். 
எங்கள் ‘ல’கரங்களையும் ‘ர’கரங்களையும் மென்மையாக்கும்
“இலங்கை” எனும் சொல்லின் காப்பாயிருக்கும் “இ” இனை
நான் காண்கிறேன்

நாம் பேசினோம்
தமிழில் இல்லாத
ஆனால் தமிழால் ஆக்கப்பட்ட
ஒரு தமிழைப் பற்றி

அதன் உடற்கூறியலினை அறிய முற்படுகிறோம்
எமது கற்களைப் படிப்பதன் மூலம்

 

காயம் - கயல் விழி 

உன் அப்பாவின் கோபம் உனது இருப்பிடமல்ல
சூடான பாலும் குங்குமப்பூவும் மணந்த போதும் 
யன்னல்கள் இழப்பினைச் சுமந்திருந்த போதும் 
அவரது சோகமே தூதான போதும் 

 

அவரது வாய் உனக்கு இருக்கிறது 
அது கதைகளின் கருச்சிதைவு,
ஆனால் மறவாதே உனது தாய்மொழி,
அது  பிழைப்பை மட்டுமே பேசும்

நான் சொல்வதைத் திரும்பச் சொல்,
என் அப்பாவின் கோபம் எனது இருப்பிடமல்ல

 

முழுமை - மணிவிழி கனகசபாபதி 

மண்ணிறக் கண்கள் என் பார்வையைக் கைப்பற்றுகின்றன 
அடியற்று ஆழ்ந்த இக்கட்கோளங்களின் உறைவிடமான முகத்தின்பால் ஈர்க்கப்பட்டு 
கொஞ்சம் முன்சாய்கிறேன்

ஒரு சிறிய, அகன்ற மூக்கு இளைப்பால் விரிகிறது,
நிறைந்த உதடுகள் காற்றிற்காய்த் தவிக்கின்றன,
நான் உன்னை அருகே இழுக்கிறேன், 
இந்தக் கண்களில் கணங்கள் கடந்து போவதைப் பார்க்கிறேன்

உன் அம்மாவின் அக்கறை, உன் அப்பாவின் கவலை,
ஒரு காதல் பார்வை, ஒருகணத் தொடுகை, நினைவுகள்
அங்கே
எழுதி இருக்கின்றன

உனது உடல் எப்பொழுதுமே இப்படியே இறுகிப்போய்
ஒவ்வொரு தசையும் ஒவ்வொரு நாரும் இழுபட்டது போல்
உனது நேர்த்தியான உரு சுருண்டு
தயாராய்!  எதிர்பார்த்தபடி! எனக்காய்!

நான் நடுங்குகியபடி ஆழமாய்த் தள்ளுகிறேன்,
தடையற்றுப் பாயும் குருதியைப் பார்த்த
அந்த நொடியில் என்னை இழக்கிறேன்
வேகமாய் நகர்ந்து  வெட்டுகிறேன்

முழுமையான கொலை, ஒரு முழுமையான கொலைஞர் 

உனதுடல் அதன் இறுதிக்கணங்களில் துடிக்கிறது
எனது காலடியில் உன்னை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
இப்போது எங்களிடையே குருதி தடையின்றிப் பெருகுகிறது
எனதுடலின் வெட்டுக்காயங்கள் ஒவ்வொரு மூச்சின் போதும் பிளக்கின்றன

பற்றற்ற எனது பார்வை தொடரும் சண்டைமேல் படிகிறது
கருணையின்றி எல்லைகள் மீறப்படுகின்றன
முழந்தாழ்கள் நெகிழ்ந்து வேதனையில் வீழ்கிறேன்

உருக்குலைந்த குரல்கள் வெற்றிக்கோசமிடுகின்றன
வென்றவரும் வீழ்ந்தவரும் ஒன்றிக்க 
வெற்றியின் ஒலிகள் மங்கிப்போகின்றன 

களத்தில் உடல்கள் கிடக்கின்றன 
பெயரின்றி, தேசமின்றி,
விதிகள் பிணைந்தபடி 
நீட்டிய கைகள்
ஒருபோதும் அறியப்படாத சமாதானத்துக்காகக் காத்திருக்கின்றன 

 

தலைப்பிடப்படாதது - குரு செல்வராஜா

தேநீருள் இஞ்சித் துண்டுகள்
இவ்வீட்டின் மணம் 
கனமான சுகப்படுத்தல் போன்றது
தோல்வி போன்றதல்ல.
என் முதல் அழுகை
ஒலித்த நிலத்தில்
கால் வைத்துப் 
பல நாளாகிவிட்டது
இரவுகளில்
என் தோலை எனக்களித்த 
அதே சூரியனின் நிழலை
உணர்கிறேன்
சிலவேளைகளில் 
அது இப்படி 
என்னை எரிக்காமல் விட்டிருக்கலாம் என்று 
விரும்பியிருக்கிறேன்- எனினும்
இரு மொழிகளுக்கும்
ஒரு நாவுக்குமிடையே-
இரு குரல்களுக்கும்
ஒரு இதயத்துக்குமிடையே 
இந்தத் தோல் மட்டும்தான்
என் ஒரே உண்மை-
என் ஒரு உண்மை
நான் அதனைப் பற்றிக்கொள்வேன்
அது என்னைப் பற்றியிருப்பது போலவே

___

Date on your own terms! myTamilDate has been the most trusted dating community for single Tamils around the world for close to a decade! We’re the premiere dating site for diaspora Tamils and have the largest membership base in Canada, USA, UK & more. JOIN TODAY: https://mytamildate.com/​

Meet our latest couple Madhu & Niya:

CLICK HERE to listen to our podcast 'Dating While Tamil' on Spotify!

2
Kumaran Nadesan
Chaiperson | comdu.it Impact Foundation
Canada
Born in Sri Lanka and raised in India, Oman and Canada, Kumaran Nadesan is a strategist...
Born in Sri Lanka and raised in India, Oman and Canada, Kumaran Nadesan is a strategist...
You may also enjoy these
Empowering Over 20,000 Families and Counting in Sri Lanka: Co-Founder Abarna Raj’s Journey with Palmera
From post-tsunami aid to lifting communities out of poverty, Australian not-for-profit Palmera has come a very long way under Abarna Raj's leadership.
Naan okay. Neenga okaya?
Breaking the silence & addressing the stigma relating to Counselling in the Tamil community.
International students: Battling with feelings of insecurity in the face of hate
“As an international student, the most difficult part for me is to stop being insecure. It’s hard to feel like you are one of the people here.”

Jenani & Nav

met on myTamilDate
Join for Free Today
Madhu & Nia
met on myTamilDate
Join for Free Today
Network with TamilChangemakers
close
Stories
Videos Podcasts